About Swamiji

Swami GuruparanandaSwami Guruparananda, a traditional teacher of Vedanta, is a disciple of Swami Paramarthananda. He has studied Vedanta in a systematic and exhaustive manner under his Guru’s able guidance. He was initiated into the Sanyasa order by Pujya Swami Dayananda Saraswati.

Swami Guruparananda teaches the Upanishads, the Gita and other Vedantic Texts in Tamil. He elucidates these texts in a methodical and elaborate manner, and in the process drives home the relevance of this knowledge in our day-to-day life.

Swamiji has been teaching Vedanta in Chennai since 1992. Seekers of truth from all walks of life are benefited by his classes. His regular classes have been meticulously recorded and are now available in this website, YouTube and iTunes.

For the benefit of ardent students and seekers of the world at large, Vedanta lectures given by him are recorded in this website. They are listed herein. Students and seekers may listen to the talks directly on this website. Talks can also be downloaded free of cost.

The Vedantic scriptures, in essence, talk about the true nature of the Individual, the World and the Divine. Swamiji’s lucid explanations help us gain a clear understanding of these topics.


ஸ்வாமி குருபரானந்தர் அவர்கள் ஸம்ப்ரதாய நெறிப்படி வேதாந்தத்தை கற்பிக்கும் ஆசிரியர் ஆவார். இவர் ஸ்வாமி பரமார்த்தானந்தர் அவர்களின் சீடராவார். தம் குருநாதரிடம் முறைப்படி, விரிவாகவும், ஆழமாகவும் வேதாந்த சாஸ்த்ரத்தைப் பயின்றவர். பூஜ்ய ஸ்வாமி தயானந்த ஸரஸ்வதி அவர்களிடம் துறவற தீக்ஷை பெற்றவர்.

ஸ்வாமிகள் உபநிஷத்துக்கள் மற்றும் வேதாந்த நூல்களை தமிழில் போதித்துள்ளார். எளிய நடையில், வேதாந்தக் கருத்துக்களை, நம் அன்றாட வாழ்வில் இந்த ஞானத்தின் பங்களிப்பை உணர்த்தும் விதத்தில் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

1992 ஆம் ஆண்டு முதல் ஸ்வாமிகள் சென்னையில் வகுப்புகளை நடத்தியுள்ளார். வாழ்வின் உண்மையை அறிய முனையும், ஸமுதாயத்தின் பல சாராரும் இவருடைய வகுப்புகளைக் கேட்டுப் பயனடைந்து வருகின்றனர். அவருடைய அனைத்து வகுப்புகளும் கவனமாக ஓலிப்பதிவு செய்யப்பட்டு தற்போது இந்த வலைதளத்திலும், யுட்யூப் மற்றும் ஐ-ட்யூனிலும் நமக்குக் கிடைக்கின்றன.

உலகின் பல்வேறு பாகங்களிலும் உள்ள வேதாந்தம் கற்போரும், ஸாதகர்களும் பயன்பெறும் வகையில், இந்த வலைத்தளத்தில் அவை தரப்பட்டுள்ளன. அவரது வகுப்புகளின் பட்டியலையும் இங்கு காணலாம். ஸ்வாமிகளின் வகுப்புகளை இந்த வலைத்தளத்தில் நேரடியாகக் கேட்டும், இலவசமாக டவுன்லோடு செய்தும் பயன்பெறலாம்.

வேதாந்த நூல்கள் தனிமனிதன், உலகம், கடவுள் ஆகிய மூன்றின் உண்மை இயல்பைப் பற்றி எடுத்துரைக்கின்றன. அவற்றைப் பற்றிய ஸ்வாமிகளின் விளக்கங்கள் நமக்குத் தெளிந்த அறிவை அளிக்கின்றன என்பதில் ஐயமில்லை.